தோழியே என்னை பொறுத்துக்கொள்

தோழியே என்னை பொறுத்துக்கொள்
சிறு சிறு தவறுகள் பெரும்பெரும் தவறுகள்
என்னை பொறுத்துக்கொள்
அறியாத தவறு
உணரும் பொழுது நொந்து போகின்றேன்
தோழியே பொறுத்துக்கொள்
இந்த அறியாத பேதையை
எல்லாம் தெரிந்து செய்யவில்லை
உணராமல் செய்துவிட்டேன்
என் தவறினை பொறுத்துக்கொள்
நீ என்னிடம் உரிமை கொண்டாடுவாய் நட்பென்று
அந்த உரிமையையும் இழந்து தவிக்கும் நான்
பேசிவிடு தோழியே பேசிவிடு
காயம் பட்ட மனதில் வடு பாய்ச்சிவிட்டேன் பொறுத்துக்கொள்
தவறினை உணர்ந்து மனம் வருந்தி கேட்கிறேன்
பொறுத்துக்கொள் தோழியே

எழுதியவர் : பிரகதி (9-Apr-18, 1:57 pm)
சேர்த்தது : அரும்பிசை
பார்வை : 378

மேலே