பணமென்னும் நெருப்பு

உடலுயிர் உள்ளவரை வேண்டுமே பணம் !
உலகினில் மக்கட்கு நிறையாதே மனம் !!

வேண்டுமென பேராசைக்கொண்டு குவித்த செல்வம்!
வேண்டுமென ஒதுங்கிடினும் வருமே துன்பம்!!

தான்சேர்ந்த பொருள்தனை அழிக்குமே தீ !
தலைக்குமேல் சேர்க்கும் சொத்தால் அழிவாயே நீ!!

பயனறிந்து உபயோகம் நாளும் நன்மையே !
பணமெனும் நெருப்புக்கும் இது உண்மையே !!

தீர்க்கமான வழியதனை தேர்ந்து நடந்திடு !
தீயானாலும் அச்சமின்றி துணிந்து நின்றிடு !!

சிறுபொறிதான் மாமலையில் காட்டுத்தீயாய் !
சிதைந்து நிற்கும் மனம் அதனை கட்டிக்காப்பாய் !!

பக்குவமாய் பயன்கொண்டால் பலன்தருமாம் நெருப்பு !
பணமதனை சீர்த்தூக்கி பார்த்தல் நம் பொறுப்பு !!

எழுதியவர் : வீ . ஆர் .கே . (9-Apr-18, 12:47 pm)
பார்வை : 116

மேலே