காவேரி மேலாண்மை வாரியமும் போராட்டமும் - ஓர் பார்வை
காவேரி மேலாண்மை வாரியம் (போராட்டம்) - ஓர் பார்வை
காவேரி மேலாண்மை வாரியம் என்றால் என்ன? ஏன் வாரியம் அமைக்கப்பட வேண்டும்? எதனால் தமிழகத்தில் போராட்டங்கள் நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றது, போன்ற பல கேள்விகளுக்கு பதில்களை தெரிந்துக் கொள்வோம் நாமும் அதற்கான குரலை உறக்கச் சொல்வோம் உலகத்திற்கு!!!!
காவேரி மேலாண்மை வாரியம் என்றால் என்ன?
தமிழகம் கர்நாடகம் இடையே நீடித்து வரும் காவிரி நீரானது, காவிரி மேலாண்மை வாரியம் ஒன்று தான் தீர்வாக பார்க்கப்படுகிறது. இதை பற்றி கீழே தெளிவாகப் பார்ப்போம்.
மத்திய நீர்ப்பாசனத் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய இந்த மேலாண்மை வாரியத்திற்கு ஒரு முழு நேரத் தலைவரையும் இரண்டு முழு நேர உறுப்பினர்களையும் மத்திய அரசு நியமிக்க வேண்டும்.
காவிரி நதி நீரை பங்கிட்டுக்கொள்ளும் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் தலா ஒரு உறுப்பினரை நியமிக்க வேண்டும். மேலாண்மை வாரியத்தில் விவாதிக்கப்பட்டு எடுக்கப்படும் எந்த ஒரு முடிவும் பெரும்பான்மை அடிப்படையிலானது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட நொடியிலிருந்து தமிழகத்தின் கீழ்பவானி, அமராவதி, மேட்டூர், கர்நாடகாவின் ஹேமாவதி, ஹேரங்கி, கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர்கேரளாவின் பாணாசுரசாகர் ஆகிய அணைகள் காவிரி மேலாண்மை வாரியத்தின் ஒருங்கிணைந்த வழிகாட்டுதலின்படியே சம்பந்தப்பட்ட மாநில அரசுகளால் இயக்கப்பட வேண்டும்.
மேலாண்மை வாரிய உறுப்பினர்கள் விரும்பினால் எந்த ஒரு அணை, நீர்த்தேக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்ய முடியும். மேலாண்மை வாரியத்தின் பணிகளுக்கு சம்பந்தப்பட்ட மாநிலங்கள் ஒத்துழைக்க மறுத்தால் அவற்றின் மீது மத்திய அரசின் உதவியை கேட்க முடியும். மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட பின்பு வாரியத்தின் உத்தரவுகளுக்கு மாநில அரசுகள் ஒத்துழைப்பு அளிக்காவிட்டால் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட நோக்கம் நிறைவேறுமா என்பதே முக்கிய கேள்வியாக இருக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தள்ளிப் போடுவதை, மத்திய அரசு அரசியல் சாசனத்தை காரணம் காட்டி தப்பிப்பதாக கருதுகிறேன். நாடாளுமன்ற அவைகளைக் கூட்டி, வாரியம் அமைக்கும் பாஜக அரசின் முடிவை வரவேற்றாலும், மத்திய அரசு கர்நாடக தேர்தலை முன்னிறுத்தி செயல்படுவதாகவே பார்க்கப்படுகிறது.
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு?
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மீதான மேல்முறையீட்டை
விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 16-ந் தேதி தீர்ப்பளித்தது. அதில்,
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பைச் செயல்படுத்த மேலாண்மை வாரியத்தை
அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.அதுவும் 6 வார காலத்துக்குள்
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவும் கெடு விதித்திருந்தது உச்சநீதிமன்றம். ஆனால் அதை செயல்படுத்தாமல் உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதித்துள்ளது மத்திய அரசு.
மத்திய அரசைக் கண்டித்து போராட்டகளமானது தமிழகம்?
கடந்த மாதம் 16-ம் தேதி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான இறுதி தீர்ப்பில் உச்ச நீதிமன்றம், மார்ச் 29-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதா மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த 1-ம் தேதி முதல் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், மவுன போராட்டம் சாலை, ரயில் மறியல் என தொடர் போராட்டங்களை அரசியல் கட்சிகள், விவசாயா அமைப்புக்கள், இயங்கங்கள், மாணவர்கள், இளைஞர்கள், வணிகர்கள், பெண்கள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் போராட்டம் நடந்தி வருகின்றன. இதனால் தமிழகமே போராட்டக்களமாக மாறியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம், புதுச்சேரியில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. 900 க்கும் அதிகமான இடங்களில் மறியலில் ஈடுபட்ட 1 லட்சம் பேர் கைது செய்யப்பட்டனர்.முழு அடைப்பு காரணமாக தமிழகம்,புதுச்சேரி மாநிலங்கள் ஸ்தம்பித்தன,
தமிழ்நாட்டில் காவேரி மேலாண்மை வாரியம் எதிரொளி?
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம்
மற்றும் புதுச்சேரி யில் எதிர்கட்சிகளின் சார்பாக மாநிலம் தழுவிய அளவில் முழு
அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இதற்கு பல அமைப்புகள் மற்றும் பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடியது. ஆங்காங்கே எதிர்கட்சிகளின் சார்பாக சாலை மறியல் மற்றும் ரயில் மறியலில் ஈடுபட்டன.காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் மத்திய அரசை கண்டித்தும் ழுழக்கங்கள் எழுப்பபட்டன.
காவேரி மேலாண்மை வாரியம் போராட்டமும்! சென்னையில் ஐபில் போட்டியும்!
சென்னையில் ஐபில் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாசாலை, சேப்பாக்கம் மற்றும் மைதானம் அருகே போராட்டம் ஈடுபட்டனர். கவிஞர் வைரமுத்து, இயக்குனர் பாரதிராஜா, சீமான், கருணாஸ் உள்ளிட்டோறும் ஐ,பி,எல் போட்டிக்கு எதிராக தங்கள் கருத்துகளை தெரிவித்து வந்தனர்.
மேலும், போராட்டத்தின் ஒரு பகுதியாக ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் கதவை இழுத்து பூட்டு போட்டு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர், மேலும் பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் ஐபில் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய கவிஞர் வைரமுத்து, இயக்குனர் பாரதிராஜா,சீமான், கருணாஸ் உள்ளிட்ட 500 பேர் மீது 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சென்னை வருகையால் பிரபலமடைந்த மோடி!
பிரதமர் மோடியின் சென்னை வருகையை எதிர்த்து விமான நிலையத்தில் உள்ள விளம்பர பேனர் மீது ஏறி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில் பாதுகாப்பு துறை சார்பில் "டெபெக்ஸ்போ 2018" என்ற ராணுவ தளவாட கண்காட்சி இன்று தொடங்கியது. இந்த கண்காட்சியை முறைப்படி தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வந்தார்.
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கருப்பு கொடி காட்ட திமுக உள்ளிட்ட பல கட்சிகள் மற்றும் அமைப்புகள் திட்டமிட்டன, பிரதமர் சென்னை விமான நிலையம் வந்த நேரத்தில் தமிழர் கலை, இலக்கிய பண்பாட்டு அமைப்பு சார்பில், பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன்,ராம் உள்பட பலர் மோடியின் ருகைக்கு எதிர்ப்பு
தெரிவித்து கருப்பு கொடி காட்டி முழக்கங்களை எழுப்பினர். அவர்களை போலிசார் கைது செய்தனர்.
திமுக வின் சார்பில் மிக பிரமாண்ட பலூன் வானில் பறக்கவிடப்பட்டது,அதில் #MODI GO BACK என்ற வாசகம் இடம்பெற்றது, இணையத்தில் #GOBACKMODI என்ற HASHTEG உலகளவில் பிரபலமடையத் தொடங்கியது.
காவேரி மேலாண்மை வாரியம் அமையும் வரை தொடர்ந்து இது போன்ற போராட்டங்கள் அமையும் என்று பல கட்சிகள் மற்றும் அமைப்புகள் தெரிவித்துள்ளனர்.
நன்றி
@சிவபாலகன்