சிவபாலகன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சிவபாலகன் |
இடம் | : நாகப்பட்டினம் |
பிறந்த தேதி | : 09-Nov-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Apr-2018 |
பார்த்தவர்கள் | : 200 |
புள்ளி | : 8 |
தமிழன்......தமிழின் பால் பற்றுக் கொண்டவன்.
காவேரி மேலாண்மை வாரியம் (போராட்டம்) - ஓர் பார்வை
காவேரி மேலாண்மை வாரியம் என்றால் என்ன? ஏன் வாரியம் அமைக்கப்பட வேண்டும்? எதனால் தமிழகத்தில் போராட்டங்கள் நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றது, போன்ற பல கேள்விகளுக்கு பதில்களை தெரிந்துக் கொள்வோம் நாமும் அதற்கான குரலை உறக்கச் சொல்வோம் உலகத்திற்கு!!!!
காவேரி மேலாண்மை வாரியம் என்றால் என்ன?
தமிழகம் கர்நாடகம் இடையே நீடித்து வரும் காவிரி நீரானது, காவிரி மேலாண்மை வாரியம் ஒன்று தான் தீர்வாக பார்க்கப்படுகிறது. இதை பற்றி கீழே தெளிவாகப் பார்ப்போம்.
மத்திய நீர்ப்பாசனத் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய இந்த மேலாண்மை
தங்கையே! வீரமங்கையே!
உன் நிலைமுன் நான் கோழையே!
இலட்சியத்தை அடைய நீதியின்
காலில் விழுந்தாயே!
கண் கொண்ட குருடராய்
நீதி தேவதையும்
காலை வாரியதே - இங்கே
நீதிக்கே நிதி வேண்டும்
என்பதை நீ மறந்தாயே!
கனவை உடைக்க வந்த நீட்டை
உடைத்தெறியாமல் இப்படி உதிர்ந்துவிட்டாயே!
எல்லோரும் காலை வாரியதால்
காலனின் காலில்
தஞ்சம் அடைந்தாயோ....!!!
காற்றுடன் கலந்து
உரையாடினேன்.....
தென்றலுடன் தேன்நிலவை
ரசித்தேன் - பெண்ணே
நீ அருகில் இல்லை
என்பதால்....!!!
@ம.சிவபாலகன்
காற்றுடன் கலந்து
உரையாடினேன்.....
தென்றலுடன் தேன்நிலவை
ரசித்தேன் - பெண்ணே
நீ அருகில் இல்லை
என்பதால்....!!!
@ம.சிவபாலகன்
விவசாயம் அன்று! இன்று!
"உழுவோர்
உலகத்தார்க்கு ஆணி"!!!
நம் பசி தீர்க்க
நீ! அல்லவா கால் வைத்தாய் கழனியில்!
நாம் ஒருவேளை உணவுண்ண
மூன்று வேளையும் உழைத்தவர் நீ-யன்றோ!
நெற்கதிர்கள் தலை கவிழ்வதும்
சோளக்கதிர்கள் நிமிர்ந்து நிற்பதும்
பூச்செடிகள் பூத்துக் குலுங்குவதும்
கரும்புகள் தோகையை விரிப்பதும்
அன்று! கண்குள்ளாக் காட்சி - இனி
வருங்கால சந்ததியினர் அதை
நிழற்படங்களில் காணுவோர் காட்சி!
அதற்கு நாம் தான் சாட்சி!!!
முப்போகம் விளைவித்து
நெல்மூட்டைகளை தலையனையாய்க்
கொண்டு உறங்கிய உழவர்க் கூட்டம்! - இன்று
நகரத்தின் நடைமேடைகளில்
கைகளைத் தலையனையாய்
கொண்டு உறங்கும் நிலையன்றோ!!!