மரணத்திற்கே மரணம்

தங்கையே! வீரமங்கையே!
உன் நிலைமுன் நான் கோழையே!
இலட்சியத்தை அடைய நீதியின்
காலில் விழுந்தாயே!
கண் கொண்ட குருடராய்
நீதி தேவதையும்
காலை வாரியதே - இங்கே
நீதிக்கே நிதி வேண்டும்
என்பதை நீ மறந்தாயே!
கனவை உடைக்க வந்த நீட்டை
உடைத்தெறியாமல் இப்படி உதிர்ந்துவிட்டாயே!
எல்லோரும் காலை வாரியதால்
காலனின் காலில்
தஞ்சம் அடைந்தாயோ....!!!

எழுதியவர் : சிவபாலகன் (9-Apr-18, 7:24 pm)
சேர்த்தது : சிவபாலகன்
பார்வை : 264

மேலே