செய்ய ஏதுமின்றி

பொன் விளைந்த
பூமியிங்கு பொழிவிழந்துப்
போனதென்ன.......

வானம் பார்த்து நம்பியிருந்த
பூமியிங்கு வரண்டுத்
தான் போனதென்ன.......

தாய் மண்ணிங்கே
தரிசாக
போனதென்ன......

கண்ணீரும் கம்பளையும்
வாழ்க்கையானதென்ன.......

புதுவருஷமும் பொறந்தாச்சு
புதுப்பானை வாங்கவும்
வழியில்லை.....

கால் வயிறும் நிறைய
வழியில்லை புத்தாண்டு
வீட்டுக்குள்ளேயே
கழியுது.......
செய்ய ஏதுமின்றி.....

எழுதியவர் : ஆர்.கோகிலா (9-Apr-18, 7:35 pm)
சேர்த்தது : ரட்ணம்கோகிலா
Tanglish : seiya edhuminri
பார்வை : 72

மேலே