விஸ்வரூபம்

சிலந்தி வலையினிலே சிக்கித்தவிக்கும்
சிறுபூச்சி என நினைத்தாயோ...!!
மண்ணில்விழும் ஒவ்வொரு முறையும்
மடிவேன் என எதிர்பார்த்தாயோ...!!
முடியாதென சொல்உதிர்த்து மூலையில் முடங்கிடுவேன் என முனைந்தாயோ...!!
தவறி விழுந்தாலும் சரி,
தடுக்கி விட்டாலும் சரி,
வீழ்ந்த ஒவ்வொரு கணமும்
விஸ்வரூபம் எடுப்பேன் - தரணியில்
சாயும் ஒவ்வொரு முறையும்
தனி சாதனையே படைப்பேன்.

~GP விக்னேஷ்வரன்.

எழுதியவர் : GP விக்னேஷ்வரன் (9-Apr-18, 11:50 pm)
சேர்த்தது : GPV THOUGHTS
பார்வை : 2444

மேலே