ஆசை
ஒருமுறையாவது உன் உச்சி நுகர ஆசை...
உன் செல்லப் பேச்சை செல்பேசியிலாவது
காலம் முழுக்க கேட்டுக் கிடக்க ஆசை...
உன்
தாயாய் மாற ஆசை...உன் குழந்தைக்கும் சேர்த்துத்தான்...
தொலைவில் நீ இருந்தாலும் நான் நிதம்
உன் நினைவில் தொலைய ஆசை..
.நான் உன்னை சேராது போயினும்
என் ஆயுள் முழுதும் உன்னை மட்டும் ஆசை தீராமல் காதலித்துக் கொண்டேஇருக்க ஆசை!...

