என் காதல் தலைவனே
கனவு என்னும் இடிக்குப் பின்
நினைவு என்னும் மின்னல் தாக்கும்...காதல் மழை பொழியும் கார்காலம்....
நனைவதும் நடுங்குவதும் நான்தான்...
இதமாய் சூடு பரப்ப
இதயத்தை அணைக்கும்
உன்னோடு முன் பேசிய வார்த்தைகள்....
தனிமையில் தேய்கிறேன்...
என் காதல் தலைவனே!..

