வன்புணர்சி
அன்னை அவள் கருவறையில்
முளைத்து விதை ஒன்று
வேர்விட்டு வானுயரம் ஓங்கி
வளர்ந்து உலகைக் காணும்
ஆசையில் தழைத்தது தளிர்
ஒன்று அதனருகே வளர்ந்த
அண்டை வீட்டு முதுமரமும்
அதன் கிளை மரமும் தான்
கொண்ட வன்புணர்சிக்காக
அதை நிழலாக்கி துளிர்
தளிர் படரவிட்டு தினம்
தினம் சிதைத்து கருகியது
அம்மா நீயே நீதிக் கோட்டு
நிற்க நீதியும் கண் கட்டி
வாய் கட்டி நிற்குதம்மா.......?