திருமணம்
இருமனங்களின் அறிமுகமாக
நடக்குது அம்மா திருமணமாம்
வாசல் கட்டியா வாழையும் தனைப்
போல் வாழ வாழ்த்த மேளங்கள்
கொட்டி மேடை ஏறும் மணமக்கள்
வேள்வி தீ வளர்க்கையில் இருள்
விலக்க அதுபோல் நம் வாழ்வில்
அது இருள் விலகி ஒளி ஏற்றி விடும்
எனும் எண்ணம் தனில் எண்ணெய்
விட்டு வளர்க்க அது முன்னிலையில்
அவள் நெஞ்சோடு என் நெஞ்சை
மஞ்சள் கயிற்றில் ஏற்றி தாலியை
அவன் கட்ட அடுத்து அம்மி மிதித்து
அருந்ததியை அவள் பார்க்க உற்றவன் உயிரை மொட்டியாக்கி அவள் விரல் மோதிரமிட அவன் நினைவை நிலம் நோக்கினும் நினைவிடும் எனும் நோக்கில்
உற்றமும் சுற்றமும் நட்பும் வாழ்த்து
மழையில் நனைக்க நடக்குதம்மா திருமணம்...!