காவேரி

நோட்டுக்கு ஓட்டை
விற்றுவிட்டு
நாட்டை நடமாடும் முதலையிடம்
வைத்துவிட்டோம் அடகு!
அந்த அடகால்
பிறந்ததே இந்தப்
பிரச்சனை குடகு
குடிநீரைக் கூறு போடும்
கொடுங்காலம் வந்ததே
கொடுக்கும் போது வாங்கினோமே
அக்கறைதான் இதைத் தந்ததே
பிரச்சனையைத் தீமூட்டி
அதன் வெம்மைத் தீயினிலே
அரசியல் கட்சிகள் தான்
அனல் இங்கு காயுதே
நீரில்லா நிலம் பார்க்க
நெஞ்சம் நெருப்பாலே வேகுதே
விதியென்று பேசுவதை
விட்டிடுவோம் புது
விதி செய்ய வீதியினை
எட்டிடுவோம்
இவன் வந்தால் மாறும்
அவன் வந்தால் மாறும்
என்றெண்ணி பார்த்திருந்தால்
ஏதுமிங்கு மாறாது
உன் நிலையே நாறும்
தனி மனிதன் மாறினாலே
துயரும் இங்கு தீரும்
இனியும் நீ
உறங்கியது போதும் தமிழா
உரிமையினை மீட்டெடுக்க
விழித்திடு தமிழா!

எழுதியவர் : சிந்தை சீனிவாசன் (27-Apr-18, 10:40 pm)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
Tanglish : kaveri
பார்வை : 1432

மேலே