மனிதனைவிட மண்சுவர் மேல் -கங்கைமணி

ஒண்டியும் அண்டியும்
பிழைப்பு நடத்துவது
மனிதர்கள் மட்டுமல்ல ,
இதோ இந்த ஆடுகளும்தான் !

இங்கே மிருகம் யார் ???!
அடைந்து கிடக்கும் ஆடுகளா,இல்லை
அடைத்துவைத்த மனிதனா ?!.

மிருகவதை சட்டம் ,சில
மனிதமிருகங்களுக்கு-
இல்லையோஎன்னவோ?!

மனிதா...!
உணவாகப்போகும் உயிரென்றாலும்,அதற்கும்
உணர்வுண்டு வதைக்காதே!.

மனிதா...!
வாடிய முகத்தை உற்றுப்பார்-
வதைக்கும் உன்னை வைவது தெரியும்.

மனிதா உன்னைவிட,இந்த
மண்சுவர் எவ்வளவோ மேல்.
-கங்கைமணி

எழுதியவர் : கங்கைமணி (27-Apr-18, 11:18 pm)
பார்வை : 136

மேலே