தாயின் ஏக்கம்

உன்னை சுமக்க நான்
என்ன தவம் செய்தேனோ?
உன்னை பார்க்கும் முன்பே
என் உலகமே நீ தான்
என உணர்ந்தேனோ?
உன்னை தாலாட்ட நான்
என் புடவை தொட்டிலை
கட்டி
என் மடியில் நீ தவழும்
அந்த நொடியை நினைத்து
நினைத்து
என் விழிகள் ஏங்கி ஏங்கி
உன் பிஞ்சு கால்கள் துதைக்க
கண்டேடா!
சுகமான அனுபவம் தந்தாய்
நீயே!!!
ஒவ்வொரு விடியலையும்
எண்ணி காத்து கொண்டு இருக்கேன் .
உன்னை காண....

எழுதியவர் : உமா மணி படைப்பு (28-Apr-18, 9:17 am)
சேர்த்தது : உமா
Tanglish : thaayin aekkam
பார்வை : 98

மேலே