மகிழ்ச்சி
உனக்கு
சூதுவும் தெரியாது
வாதுவும் தெரியாது
மதுவும் தெரியாது
மாதுவும் தெரியாது
பகையும் தெரியாது
புகையும் தெரியாது
இவையாவும் தெரியாததால்
உன் முகத்தில்
தெரிகிறது
மகிழ்ச்சி !
இன்று போல்
என்றும் வாழ்க!.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
