சுனாமி சுவடுகள்

சுனாமி சுவடுகள் பிணாமி
நாமத்தினாலும் உலாவரும்
எச்சரிக்கை கிடைத்தாலும்
துச்சமென கொள்வதாலோ
அனாயசமாக சூரையாடி
உயிரையும் உடமையையும்
குழிதோண்டி புதைத்திட
வழி வகுத்து விடுகின்றது
ஞாலமே கண்கலங்கிடவே
வேண்டாத வேண்டுதலா
கனாக் கலைந்தது போல்
வனாந்திரமாக்கி செல்லும்
நம்தலை விதி என்னவோ
சேர்த்ததை இழக்கவும்
இழந்ததை சேர்க்கவும்
வாடிக்கை யாகிவிட்டது
முப்பக்கமும் கடல்மயம்
எப்பக்கத்திலும் ஆபத்தே
தீவினைப் போன்றன்றோ
வாழ்கின்ற வாழ்க்கையும்
மழை வருகிறதெனவே நாம்
குடையை விரிக்கின்றோம்
நனையாதிருக்க மட்டுமே
மழை நிற்பதற்கு அல்லவே
இயற்கையின் சீரல்கள்
காலநிலையை பொருத்தது
விரட்டிட முடியாது நாம் விலகிச்செல்வது நலமே
சுனாமி சுவடுகள்நினைவை விட்டு அழிவதில்லை நம் அழிவை நினைவு கொள்ள வைத்தே மகிழும் சுனாமி
•••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி எழுதிய
"சுனாமி சுவடுகள்"
கவிதைமணியில்