என் அன்பு தோழிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

என் உயிரின் உயிரானவளுக்கு பிறந்தநாள்..🎂

உனை வாழ்திட பேனா எடுத்தேன் வானவில் தானாக முன்வந்து மை தந்தது..☺

ஓர் உயிராய்
இந்த உலகத்தில் வந்த நீ
ஓர் உறவாய்
என் உயிரில் கலந்தாய்
என் மனதில் நிறைந்தாய்..😍

வாழ்வில் அழகான தருணங்கள்
நம் அன்பான நட்பால் உருவானது
அதில் அழியாத நினைவாய்
நீ உருவானாய்..👫💓

நீ என்மீது செலுத்திய
அன்பை திருப்பித் தர
நான் முயற்சித்தேன்
உன் அன்பிற்கு ஈடு
செய்ய முடியவில்லை..💞

மாறிவரும் இந்த உலகத்தில்
மாறமல் நாமிருந்தோம்..❣
உனை காண
என் மனம் ஏங்குகிறது..💙

மறுஜென்மமென ஒன்றிருந்தாலும்
உன் தோழனாய் வரவேண்டும்..👫💝
ஆஸ்மி என்று அன்பாய் அழைப்பேன் எந்தன் உயிர்மூச்சு உள்ளவரை..!💖

ஆஸ்மி தோழிக்கு,
இந்த அன்பு நண்பனின்
மனமார்ந்த
பிறந்தநாள் வாழ்த்துக்கள்..❤❤

எழுதியவர் : சேக் உதுமான் (3-May-18, 11:07 am)
பார்வை : 17542

மேலே