தன்னம்பிக்கை

இமயத்தில் இருந்து என்னை
சமயத்தில் சாய்த்து விட்டோம் என்று
புளகிதமடையும் புல்லுருவிகளின்
புழுதிக் கூட்டங்களுக்கிடையே
மெல்லிய நாதம் தரும்
நல்லதோர் வீணையாய்
நடமாட வைப்பவன் நீ.

அய்யோ பாவம் என்று
அங்கலாய்ப்பவர் முன்
ஆண்மை கலந்த பெண்ணாய்
அலங்கரிப்பவன் நீ.

வீழ்வேன் என்று
காத்திருப்பவர் முன்பு
வீறுநடை
போட வைப்பவன் நீ.

கரும்பென உடையும்
மனதை
இரும்பென மாற்றுபவன் நீ.

மௌவல் போன்றவளை
ரௌத்திரம்
பழக்குபவன் நீ.

எழுதியவர் : லஷ்மிவாசா (9-May-18, 11:06 am)
சேர்த்தது : Remix Maya
Tanglish : thannambikkai
பார்வை : 95

மேலே