வாழ்த்துக்கள்
அனைத்து மாணவ மாணவிகளுக்கும் அனைத்து பரீட்சையிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்........
கோட்டை உண்டு , கொட்டும் முரசும் உடன் உண்டு
அகழி அடைக்கும்வழி அகிலத்தில் பலவும் உண்டு
தடைகள் தாண்டி வர மனதில் பலம் உண்டு
முட்டுக்கள் தகர்க்க முயற்சியின் பயன் உண்டு
ஆலோசனைக்கும் ஆசிர்வாதத்துக்கும் பலன் உண்டு
படிப்பின் கவனம் பரிட்சையில் பதில் உண்டு
முடிவின் வெற்றியால் முகத்தில் சிரிப்பு உண்டு
எதிர்காலம் நோக்கி இளந்தளிர்நீ போகக் கண்டு
பாராட்டி மகிழ நாங்கள் உண்டு
பரவசப்பட உன் பெற்றோர் உண்டு