பட்டியல் வெளியேற்றம்

பட்டியல் வெளியேற்றம்
கர்ணனையே தாழ்ந்தவன் என்றது ஆரியகுலம்...
இந்திரனையும் தாழ்ந்தவன் என்றது திராவிடகுலம்...
அன்று தேவேந்திரன் தன் மகனுக்காக
கர்ணனின் கவசத்தை பெற்றதாலோ என்னவோ...
இன்று தேவேந்திரனின் பரம்பரையே கர்ணனின் நிலையில் வாடித்துடிக்கிறது...
பாண்டவராய் பார்த்து சிரிக்கிறது தமிழகம்...
கொளரவராய் கைகொடுத்து தூக்குகிறது இந்தியா...
சூழ்ச்சிகள் பலவாயினும் அதன் வேர் அறுப்போம்...
தலைமுறைகள் தலைநிமிர எங்கள் உயிர் கொடுப்போம்...
கடவுளிடமே கையை உயர்த்தி வரம் கேட்டவன்...
வயலில் மட்டுமே சிரம் தாழ்த்தி விவசாயம் செய்தவன்...
உழைப்பவன் என்றும் தாழ்ந்தவன் அல்ல...
தாழ்ந்தது என்றும் விவசாயம் அல்ல...
- த.சுரேஷ்