வாழ்த்துகள்
வாழ்த்துகள் !!
அன்னை கொடி அறுத்து,
பார் நோக்கி கண்திறக்க,
பார் உன்னை வாழ்த்தியது !!
மெல்லிய காற்று உன்மீது படர,
நீ காற்றோட கதை பேச,
தென்றல் உன்னை வாழ்த்தியது !!
அந்தி இரவில் இருள் நோக்கி,
கண்ணீர் மல்க நீ கலுழ்கொள்ள,
மதி உன்னை வாழ்த்தியது !!
கதிரவன் துயில் கலைய,
துகில் இல்ல நீ சுடர்விட,
செவ்வானம் உன்னை வாழ்த்துயது !!
கண்மூடிய அன்னையை,
கீக்குரலிட்டு நீ அழைக்க,
புன்னகை உன்னை வாழ்த்தியது !!
தந்தையின் முகம் நோக்கி,
கண்சிமிட்டி கால் உதைத்தயே,
கண்ணீர் உன்னை வாழ்த்தியது !!
நான் காணா கணத்தில் நீ பிறக்க,
உன் சுவாசத்தின் தூதுதனில்,
பல்லாண்டு என்னோடு நீ வாழ
வாழ்த்தோடு வந்தது என் இதயம்..
அடி என்னவளே
பிறந்தநாள் வாழ்துகள்! !!!
உன்னவன்
தௌபீக்