தொலைந்து போன காதலே
************************************
தொலைந்து போன காதலே...
************************************
மூச்சுக்காற்றாய் ,
என்னுயிரினுள் கலந்து ; //
என் மனமுழுவதும் ,
உன்னைச் செதுக்கி; //
என் எண்ணங்களில்,
உன்னை நினைவாக்கி;//
என் எழுத்துக்களை ,
கவிதையாக்கி...//
என்னையும் கவியாக்கி...//
கடந்துச்சென்றாயே...
என் காதலே....//
வழியாய் வந்து....//
விழியாய் காதல் பேசி...//
வலிமறக்கடித்த என் காதலே....//
என்னையும் ,
மறந்து விட்டாயோ.... இப்பொழுது....//
என் பார்வையை .. நீ,
பறித்துக்கொண்ட பின்பும்...//
உன்னையே தேடி
அலைகின்றேன்....//
என் மொழிகளை.... நீ,
மௌனமாக்கிய பின்பும்...//
உன்னையே அழைக்கின்றேன்...//
கடத்திச்சென்ற என் மனதை
நீ மறந்துவிட்டாய்...//
திருப்பிக்கொடுப்பதற்கு....//
கொடுத்த உன் மனதையும்
மறந்துவிட்டாய்.. //
என்னிடம் திருப்பிக்கேட்பதற்கு.....//
சிக்கித்தவிக்கின்றேன்,
வாழ்விற்கும்.... சாவிற்கும்...மத்தியில்//
தேடி அலைகின்றேன்,
தொலைந்து போன என் காதலை...//
உன்னையே ,
உயிராய் நினைக்கின்றேன்..//
உனக்கென
உயிரையும் கொடுப்பேன்.....//
உன்னுள்,
உயிராய் இருப்பேன்...//
திரும்பிவருவாயெனக்
காத்திருக்கின்றேன்.....//