இயலாமை
ஒவ்வொரு இரவிலும்
என் தனிமையின் கரங்களில்
சில கண்ணீர் துளிகளை
ஒப்படைத்து விடுகிறேன்
அதனுள் தான் என் உலகின்
இயலாமை அனைத்தையும்
மறைத்து வைக்கின்றேன்
அந்த கண்ணீர் துளிகளைக் கடப்பதைப் போலவே
எனக்கான நிராகரிப்புளையும்
கடந்து விடுகிறேன்
சிறு இதழோர புன்னகையோடு