என் அன்னையே

என் அன்னையே உனக்கென்று
ஒரு தினம் உனக்காகவே இந்நாள்
இன்று மட்டும் உன் அன்பினை உணர்ந்திட போதுமோ
வேண்டுமே பல கோடி ஆண்டுகள்
என் அன்னையே
நானே உன்னை வெறுத்தாலும்
நீ என்றும் ஒரு நாளும் வெறுத்ததில்லை
தாயே நான் உருவாக உன் உதிரத்தையே எனது உயிராக்கினாய் அன்னையே வேறு என்ன வேண்டும் இம்மண்ணில் என் பாதம் பதித்திட நீ அரும்பாடுபட்டாய்
என் கண்ணில் நீர் கண்டால் உன் கண்ணில் குருதி சிந்துவதை கண்டேன்
தாயே எனது வெற்றியும் நீ தான் எனது மகிழ்ச்சியும் நீ தான்
எனக்காக உழைத்தவள்
தன் வாழ்வையே எனக்காக கொடுத்தவள்
தாயே என்னை முழுமையாக்க உன்னை பாதியாக்கினாய்
எனது லட்சியம் வெற்றியாக்க உனதினை தியாகம் செய்தாய்
தியாகச் சுடரே
உனை சிறப்பிக்க போதாது இந்த பிறவி வேண்டுமே பல பிறவி
இறைவனிடம் மீண்டும் மீணடும் வேண்டுவேன் நீயே என் தாயாக நானாக உன் மகளாக வேண்டுமே இன்னொரு பிறவியிருந்தால்
வேறென்ன வேண்டும் எனக்கு
என் தாயே என் அன்பே
எத்தனை கவி பிறந்தாலும் உன் அன்பினை போன்றதொரு அழகு கிடைக்குமோ ?
உன்னை போல வேறு உறவில்லை
இவ்வுலகினிலே
எல்லோர் அன்பிற்கும் போட்டி வைத்தால் உன் அன்பினை தோற்கடிக்க இயலாது என் அன்னையே உனக்கான இத்திருநாளில்
அன்னையர் தின வாழ்த்துக்கள்

எழுதியவர் : பிரகதி (13-May-18, 3:55 pm)
சேர்த்தது : அரும்பிசை
Tanglish : en annaiyae
பார்வை : 1102

மேலே