அம்மா
அம்மா...
நான் தேர்ந்தெடுக்காமல்
என் வாழ்வில் வந்த தேவதை நீ...
உன் நினைவுகளில் இருக்கிறது...
என் நிரந்தர சொத்து...
அதை... என்றும்...
நியாயமாகவும் முடியாது...
அநியாயமாகவும் முடியாது...
அபகரித்துவிட என்னிடமிருந்து...
நான்...
வாழ்ந்த பொழுதுகளில்
அம்மா... நீ... என்னைப்
பெற்ற பொழுதுகள்...
இமைப் பொழுதும்
பிரியாமல் உடனிருந்தாய்..
வேறு எதற்கும் இதுபோல்
யார்தான் இருந்தார்...
யார்தான் இருப்பார்...
எல்லோரின் சரிதைகளிலும்
எழுதப்படாத பொதுவான
முகவுரை இதுதானே...
இது ஒன்றுக்கே தாயான
பெண்கள் எல்லோரின்
பெயர்களையும் கின்னஸில்
எழுதிவைக்கலாமே...
பள்ளி செல்லும் வரையில்
உன்னிடம் கற்றதே
போதுமானதாய் இருக்கிறது
இவ்வுலகை எதிர்கொள்ள...
பள்ளி சென்று பயின்றது
நீ பெருமை கொள்ள..
உன் பெருமை சொல்ல..
நீ இல்லாமல் நான்
வாழ்ந்து கொள்ள...
கந்தையானாலும்
கசக்கிக் கட்டவேண்டும்...
காலையில் குளித்துவிட்டு
வாசல் தாண்டவேண்டும்...
இரவில் படித்துவிட்டு
தூங்க வேண்டும்
என்பதை எல்லாம்
எங்களுக்குக் கற்றுத்தந்த
பள்ளிக்கூடம் செல்லாத
பல்கலைக்கழகம் நீ அம்மா..
சில நேரங்களில்
குழந்தைகள் பசியாற
அவசர அவசரமாய்
சூடாய்த் தானியத் தோசைகள்
சுட்டுக் கொடுப்பாயே...
அதன் சுவைக்கும்... வெறும்
உப்பு புளி பச்சைமிளகாய் மட்டுமே
வைத்து அரைத்து தரும்
துவையலின் சுவைக்கும்
இணையாய் இன்றளவும்
எந்த உணவிலும்
சுவை அறிகிலேனே...
உன் கை பட்டால்
அவித்த அகத்திக்கீரை கூட
நீர்த்தண்ணி சேர்ந்து
அமிழ்தமாகுமே...
பொரித்த பாகற்காய்
சுவைத்திடுமே..
பீர்க்கங்காய் சட்னி
மிரட்டிடுமே...
அம்மா... உன்னை நினைத்திட
என் கவிதை கூர் பெறுகிறது...
என் பாதை நேர் பெறுகிறது...
என் பயணம் சீர் பெறுகிறது...
உணர்வெல்லாம் உயிர் பெறுகிறது..
சேய்களுக்கு வரம் வேண்டி
தாய்மை தவமிருக்கும்...
அம்மா.. உந்தன்
நிழலென்னும் சொர்க்கத்தில்
வாழ்ந்திருந்த எனக்கு
வேறொரு சொர்க்கமும்
இனிமேல் வேண்டுமோ...
அன்பைக் கற்றது அன்னையின்
அரவணைப்பில்...
அழுகையிலும் ஆனந்தம்
கொண்டது அன்னையின் அருகாமையில்...
அன்னையர் தின
வாழ்த்துக்கள்...
👍🙏🙋🏻♂🌹