தாய்க்கு ஒரு கவிதை

நீ என் உறவல்ல என் உயிர்
உன் தியாகத்துக்கு இந்த ஒரு நாள்
மட்டும் போதுமா அம்மா
நிச்சயமாக இல்லைமா..
காலம் முழுவதும் உன் காலடியில்
கிடந்தாலும் நீ செய்த தியாகத்துக்கு
ஈடாகாது #அம்மா!!!!

உனக்கென்று ஒரு தினமா..?
உன்னை அனுதினமும்
கொண்டாட வேண்டும் #அம்மா..
எனை சுமந்த உன்னை
என் உயிர் உள்ளவரை சுமப்பேன் #அம்மா!!!

தன் கவலைகளை தனக்குள்
மறைத்துக்கொண்டு!!!
என்னை வயிற்றில் சுமந்து கொண்டு!!!
என் சுவாசங்களுக்காக சுவாசித்தவள்!!!

சிப்பிக்குள் இருக்கும் முத்து போல்
என்னை பொத்தி பொத்தி வளர்த்தவள்..!

என் மேல் எல்லையில்லா பாசம்
கொண்டவள்...!

நான் கண் அயர மடி தந்தவள்..
நான் வாழ்வில் உயர ஏணி ஆனவள்..

உன்ன நான் ரொம்பவே கஷ்ட
படுத்திருக்கேன்..
உன் மேல கோபமும் பட்டுருக்கேன்..
ஆனா நீயோ எல்லாம் மறந்து
ஏன்டா இன்னும் சாப்பிட
வீட்டுக்கு வரல ன்னு அலைபேசி மூலம்
அன்பாய் அழைப்பாயே #அம்மா..
இவ்வுலகில் கோபத்தை வெல்வது
தாயின் பாசம் மட்டுமே!!!

இந்த உலகில் உள்ள உறவுகள்
அனைத்தையும் ஒன்று திரட்டினாலும்
உன் போல் யாரும் அன்பு செய்ய
முடியாது #அம்மா..!

சுற்றியுள்ள உறவுகள் எல்லாம்
உணவு உண்டு கண் உறங்கும்
வேளையில் கூட எனக்காக கண்
விழித்து காத்திருப்பாயே #அம்மா..
அப்படி நான் உனக்கு என்ன செய்தேன்..?
உன் வயிற்றில் வந்து பிறந்தது தவிர
வேறொன்றும் செய்யவில்லையே #அம்மா..!

உலகில் உள்ள எல்லா கவிதைகளும்
தோற்றுப் போய்விடும் #அம்மா என்ற
ஒற்றை சொல்லுக்கு முன்னால்..!

உனக்காக கண்ணீர் சிந்தியவள் அவள்
உன்னை நினைத்து
கண்ணீர் சிந்த வைத்து விடாதே!!!!

அவள் வாழும் காலம் வரை
அவளை எந்த கஷ்டமும் இல்லாமல்
பார்த்துக் கொள்ளுங்கள்..!

அனைத்து தாய்மார்களுக்கும்
என் கவிதை ஓர் சமர்பணம்

அன்பான அம்மாவுக்கு,
#அன்னையர் தின வாழ்த்துக்கள்😍

இதுவரைக்கும் உன்ட சொன்னதில்லை
#அம்மா
உன்னை எனக்கு ரொம்ப புடிக்கும்..!
#அம்மா😘 💓

உன்னை நேசிக்கும் மகனாக,
❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (13-May-18, 7:56 pm)
பார்வை : 6414

மேலே