அன்னை என்னும் வரம்

வார்த்தைகளின் வர்ணனையில்
அடங்காத உயிரோவியமே
வாழ்க்கை வரமானது
உன்னால் தானம்மா
தெய்வங்கள் கூடும்
திருக்கோவில் சுடராய்
தன்னலமற்ற பாசத்தின்
மணி மண்டபமாய்
பண்பு புகட்டுகையில்
கண்டிப்பான ஆசானாய்
நல்வழி நடத்தும்
நலம்விரும்பி தோழியாய்
அன்பின் கதகதப்பில்
வாழ்நாள் வள்ளலாய்
தியாகத்தின் திருவுருவாய்
ஞாயலத்தின் பீடமாய்
காலம் கடந்தாலும்
தோற்றம் முதிர்ந்தாலும்
முற்பிறவித் தவத்தின்
இப்பிறவி அருளே
எப்பிறவியிலும் நின்சேயாய்
நின் மடிசேரும்
வரமொன்று போதும்
வருங்காலம் வசந்தமே

எழுதியவர் : அருண்மொழி (13-May-18, 8:18 pm)
சேர்த்தது : அருண்மொழி
Tanglish : annai ennum varam
பார்வை : 1574

மேலே