என்னை என்னிடமே திருப்பி கொடுத்து விடு

நொடி பொழுது கூட இமைக்க
மறுக்காத விழிகளிடம் கேட்கிறேன்
என்னவனை கண்டாயோ என்று..

நொடி பொழுது கூட சுவாசிக்க
மறுக்காத மூச்சு காற்றிடம் கேட்கிறேன்
என்னவனின் சுவாசத்தை கேட்டாயோ என்று ..

நொடி பொழுதும் பிரியா
மௌன இதழிடம் கேட்கிறேன்
என்னவனின் இதழ் சொற்களை கேட்டாயோ என்று ..

வருவாயோ திரும்பி ..
வர மறுப்பாயோ என்னிடம்

தொலைந்து போன உன்னிடம்
என் நினைவுகளை பரிசாக கேட்கிறேன்
திருப்பி கொடுத்து விடு என்னிடமே ..

உன்னுள் தொலைத்த என் மனதினை
பரிசாய் கேட்கிறேன்
என்னை திருப்பி கொடுத்து விடு என்னிடமே

காலம் தோறும் தொடரும்
என் நினைவு அலைகளை உன்
நெஞ்சின் ஓரத்தில் பாரமாய்
சுமக்காமல் ..

என் சுமைகளை என்னிடமே
கொடுத்துவிடு..
ஏதுமறியா என் விழி நீர் வழிய
ஏற்று கொள்கிறேன் ....சுகமான சுமையாய்

எழுதியவர் : ரோஜா (19-May-18, 12:19 pm)
சேர்த்தது : ரோஜா
பார்வை : 313

மேலே