பறவையோடு பேசுகிறேன்

ஒரு பறவையோடு தினமும் பேசிக்கொண்டிருக்கிறேன்....
ஆம் ....அது
சிறகுகளை விரித்து சுற்றித்திரிகிறது.......
வானத்தின் முகடுகளை முகர்ந்து செல்கிறது...
நீர்விழ்ச்சியில் நீராடி...
மலை சிகரங்களில் தலைதொவட்டி......
சுதந்திரமாய் சுற்றுகிறது..................கனவுகளில்..........
நிஜத்திலோ......
சிறகுகளை இழந்து.....
கூண்டுக்குள் அடைந்து.....
கண்ணீரில் கரைந்து.......
கண்ணாடியின் வழியே என்னை பரிதாபமாய் பார்க்கிறது........!
ஆம் ..தினமும் பேசுகின்றேன்....
கண்ணாடியின் வழியே ....
கூண்டு பறவையுடன்.............

எழுதியவர் : ரேஷ்மா (19-May-18, 12:06 pm)
பார்வை : 194

மேலே