தாமரை

கற்பிற்கு மங்கையர் எனில்
மலர்களில் கற்புக்கரசி
தாமரையே, நீரில்
முளைத்தெழுந்தாலும்
நீருக்கு மேல்தான் முகம்
நீரும் தீண்டா முகமென்றால்
அதன் உடலாம் இலையைக்கூட
நீர் தீண்ட முடியலையே -ஏனெனில்
தாமரை கதிரவன் ஸ்பரிசத்தால்
மலர்ந்து வாழ்பவள் அவனே அதன்
காதலன், தூயவள் தாமரை.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-May-18, 9:49 am)
பார்வை : 73

மேலே