புதையல் 5
புதைந்த புதையலுக்காக சிங்காரம்
தாத்தா சொன்ன குறிப்புகளை கொண்டு தன் பயணத்தை தொடர்ந்த பேரன்களில் இரண்டாவது பேரன் காட்டில்
மிகவும் பயமுடன் தன் இரவை கழித்து விடியற்காலை மயங்கிய நிலையில் மிகுதியான உடல் நிலை
சரி இல்லாமல் குளிர் காய்ச்சலில் அவதி பட்டு கொண்டு இருந்தான்.
விடியற்காலை வந்தவுடன் நதியின் அருகே இருந்து தன் பயணத்தை தொடர்ந்த முதல் பேரன் தன் அடுத்த குறிப்பான காட்டில் நுழைந்தார்.
தனக்கு ஆபத்து வரும் என தன் தாத்தாவின் துப்பாக்கியை கையில் வைத்திருந்தார்.தன் உணவை காட்டில் ஒரு இடத்தில் சாப்பிடலாம் என எடுத்து கொண்டு தைரியமாக
காட்டில் நடந்தார்.
தீடீரென முனங்கல் கேட்க ஆரம்பித்தது. யார் ? யார் இருக்கிறீங்க? என்ன சத்தம் விலங்காக இருக்கலாமா? இல்லை.என்னவாக இருக்கும் என
யோசித்து கொண்டே சத்தம் வரும் இடத்தை நெருங்க நெருங்க அங்கே
ஒரு போர்வைக்குள் தன் தம்பியை பார்த்தவுடன் நீ எப்படி இங்கே? என
கேட்டான்.
நீ தாத்தாவிடம் பேசியத்தை மறைந்து இருந்து கேட்டேன்.நானும் புதையலை தேடி வந்தேன்.உனக்கு முன்னாடி செல்ல வேண்டும் என
வேகமாக வந்து இந்த காட்டில் மாட்டிக்கொண்டேன்.காய்ச்சலும்
வந்து விட்டது.
இரவில் இந்த காடு மிகவும் பயங்கரமாக இருக்கும் என தன் பேராசையும் தன் நிலையும்
கூறினான் இரண்டாவது பேரன்.
தன் சகோதரனை காப்பாற்றுவாரா? நேர விரையம் விரும்பாது அப்படியே
விட்டு செல்வானா?
புதையலை விட்டு வீடு செல்வார்களா? இல்லை.
என்னதான் நடக்கும்.......??????