சொல்ல நினைக்கும் கதை 7

மதியின் நிலை தனியாக அனைவரையும் எதிர்த்து நின்று தன் காதலை நிலைக்க செய்ய முடிவு செய்தால், மதியின் தாய் மாமன்
75 வயது ஆகும் அவர் அனைவரையுமே கணிசமாக பார்த்த
உடனே புரிந்து கொள்வார்.
மதியின் குடும்ப ஆலோசகர் இரண்டு தலை முறையின் மூத்தவர்.
அது மட்டுமல்ல தாய்மாமனின் மகளும் காதல் திருமணம் செய்தவர்.. போராடி வெல்லவில்லை தன் அப்பாவின் துணை கொண்டு
வென்றார்.அதிலும் உறவுகளின் எதிர்ப்பு,வயது வித்தியாசம் அதையும் தாண்டி திருமணம் ஆகி
இரு குழந்தைகள் இருந்தனர்.
அவரிடம் பேச முடிவு செய்தாள்.முடிவாக தனியாக பேச
அனுமதி பெற்று பேசவும் ஆரம்பித்தாள்.
நான் அரசு என்பதை காதலிக்கிறேன்.திருமணம் என்றால் அவன் ஒருவன் மட்டும் தான்.நினைவு தெரிந்த நாள் முதல் நேசிக்கிறேன்.என கூறி அரசின் கைபேசி எண் மூலம் அவரை பேச வைத்தாள்.
அவனும் பேசினான் நாளை தன் குடும்பத்தோடு வருவதாக கூறினான்.அதுமட்டும் இல்லை அதற்கு முன்பே தன் குடும்பத்தால் ஒரு குடும்பத்தை பெண் பார்க்க வர
சொல்லி இருந்தனர்.
என்னால் முடியாது என கதறினாள்.
உறவுகளை தூக்கி எறிந்து தன் வாழ்க்கைக்காக போராடினாள்.
அரசு அவர்களின் வாக்கு தவற கூடாது என அவளிடம் நீ சம்மதிக்க வேண்டும் என கூற மதியும் ஒத்து
கொண்டாள்.

எழுதியவர் : உமா மணி படைப்பு (20-May-18, 9:27 pm)
சேர்த்தது : உமா
பார்வை : 138

மேலே