கர்ரு டர்ரு

என்னடி கண்ணம்மா உம் பசங்க நாலு பேருக்கும் 'கர்ரு, கர்ரு, ,கர்ரு, கர்ரு' -ன்னு பேரு வச்சிருக்கிறீங்க?
😊😊😊😊😊
எங்க பசங்க பேருங்க ஒண்ணும் 'கர்ரு, கர்ரு, கர்ரு, கர்ரு' -இல்ல.
அவுங்க பேரு பாஸ்கர், தினகர், திவாகர் , சுதாகர்.
😊😊😊😊😊
அதத்தாண்டி நானும் கேட்டன். பாச்சுகர்ரு, தின்னகர்ரு, திவ்வாகர்ரு, சுத்தாகர்ரு. எதுக்கு இந்த நாலு பேரும் 'கர்ரு'?
😊😊😊😊😊
உங்க காலம் எல்லாம் முடிஞ்சு போச்சு. எங்க காலம் இந்திப் பேருங்களையும் பிறமொழிப் பேருங்களையும் பிள்ளைங்களுக்கு வச்சு பெருமைப்படற காலம்.
நாங்க 'கர்ரு'ன்னு வச்சா என்ன 'டர்ரு'
வச்சா என்ன? உங்க வேலையப் பாத்துட்டு போங்க காத்தாயி பாட்டிம்மா.
😊😊😊😊
உன்னக் கேட்டது தப்புத்தாண்டி இந்திக்காரத் தமிழச்சி.

எழுதியவர் : மலர் (30-May-18, 10:27 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 191

சிறந்த நகைச்சுவைகள்

மேலே