ராமு-சோமு உரையாடல் சிரிக்க, சிந்திக்க
ராமு : என்னடா சோமு, என்னத்த கண்டே
அங்கே அப்படி மலைச்சிபோய்
நிக்கறே '''''''''''அப்படி என்னத்தடா
அங்கே பாக்கற.........நில்லு,நானும்
வரேன் பாக்கலாம்............
சோமு : ஐயா, ராமு ஐயா,இங்க நீங்க
வந்தே ஆகணும் .....அந்த துளசி
செடி மேல ஒரு நல்ல பாம்பு
தோல் உரிச்சிப்புட்டு இப்போதாங்க
போய்க்கிட்டிருக்கு....நான் அதா
பாத்து மலைச்சிட்டேன் ........
பாம்பு தோல் உரிப்பது
பாக்கறது எனக்கு அதிசயம்
இல்லீங்க.....ஆனா அதிலே ஒரு
ரகசியம் தெளிவாச்சுங்க.....
ராமு : என்ன சோமு புதிர் போடற ..
விளக்கமதான் சொல்லேன்....
(ராமுவும் அந்த நல்ல பாம்பு
தோலை பாக்கறார்)......ஆமாம்
சொல்லு சோமு ..........என்ன ?
சோமு : ஐயா, பேப்பர் ல படிக்கறேனுங்க இப்பல்லாம் நம்ம
ஊர்களிலும் கூட ,திருமணம்
ஆன, சில மாதங்கள், ஒரு சில
வருடங்கள், ஏன் சில நாட்களிலே
கூட மனைவி கணவனை,
கணவன் மனைவியையும்
விவாக ரத்து செய்துகிறதா
படிச்சேன்......அப்பா இந்த பாம்பு
தோலை உரிச்சிட்டு போறது
பார்த்தேன்........இப்படித்தான்
இந்த விவாஹ ரத்து தெரிஞ்சுது..
ராமு : டேய், இது ஒரு கவிஞனின்
ஒப்பிடுதல் போல இருக்கு
நானே அசந்துட்டேன் போ;
ரொம்பவே கரெக்ட்கா சொல்லற
நிலைமையை நெனெச்சா
அப்படித்தான் தெரியுது......