காதலன்-காதலி உரையாடல் - சிரிக்க, சிந்திக்க

காதலன் : என்னவளே, உந்தன் வட்ட நிலவு
முகத்தில், சிவந்த உந்தன்
இதழ்கள் அன்றலர்ந்த செம்பருத்தி
போல் இருக்குதடி.......

காதலி : போதும் போதும் உங்கள் இந்த
கர்நாடக புகழ்ச்சி ....கோபம்
கோபமாய் வருது எனக்கு ......
ஆயிரம் ரூபாய் கொடுத்து
வாங்கின மாட் லிப்ஸ்டிக் என்
அதரத்திற்கு அழகு... என் அழகை
ஒரு சர்வதேச மாடலோடு ஒப்பிடு
இந்த பூவோடு, காயோடெல்லாம்
எனக்கு பிடிக்காது.
காதலன் : அப்படியே ஆகட்டும் அன்பே .
இனி நான் அப்படியே கூறுவேன்
காதலி : இந்த அன்பே ,கின்பெனு
கூப்பிடறதை நிறுத்து ............இந்த
' தமிலெல்லாம் ' எனக்கு
பிடிக்காது.... 'மீ லவ், டார்லிங் னு
கூப்பிடு, இல்லாட்டி என்னை
மறந்துவிடு.
காதலன் :( சொல்லத்தெரியாமல்
வாயடைத்து போகிறான் )
( பாடம் : நட்பிற்கு நல்ல நண்பனை நாடு
காதலுக்கு நல்ல கருத்தொருமித்த
மனதை நாடு)

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (30-May-18, 3:16 pm)
பார்வை : 825

மேலே