சிறுக்கி வாசம் காத்தோட ,,,,,

மூச்சு காற்று முகத்தை தீண்ட
அவள் ஆசை கொண்டு ஏக்கம் கொள்ள ,,,

எனக்கு விலகி செல்ல கஷ்டம் தான்
ஆனால் நெருங்கி செல்ல தயக்கம் தான் ,,,

அவள் விழிகள் தீண்டினாலே வீழ்ந்து விடுகிறேன் ,,,
அவள் இதழ்கள் தீண்டுகையில் என்னவாவேன் ,,,

அவளை அணைத்து கட்டி கொள்ள ஆசை உண்டு
தாலி கட்டி விட்ட பின்னர் ,,,

காதலால் ,,,,,,

காதலே காதலாய் காலமும் வாழ்கிறது ,,,
கற்பனை உலகினில் காலமும் நகர்கிறது ,,,

விழிகளின் தீண்டலே விடியலாய் ஆகிறது ,,,
இதய நுனிகளில் காதலும் ஓயாமல் வளர்கிறது ,,,

அதை எடுத்து எழுதும் முயற்சிகளில் ஏமாற்றம் தருகிறது ,,,!!!!

எழுதியவர் : பா.தமிழரசன் (4-Jun-18, 9:39 am)
சேர்த்தது : தமிழரசன் பாபு
பார்வை : 231

மேலே