ஒழுக்கமில்லாதுன் அழிவைக் கண்டு
மருத்துவமனையிலேயே தங்கினும் நோய் தீர வாய்ப்பில்லை.
எதுக்கெடுத்தாலும் அறுத்து போடுவதே மருத்துவரின் வேலை.
பையில் உள்ள பணம் கரையும் வரை கவனிப்பெல்லாம் பிரமாதம்.
காசு இல்லாத ஏழை புழுதி மண்ணும் மருந்தாகும்.
யார் எப்படி வாழனும் என்பதை தீர்மானித்து எல்லா வல்ல இறையும் துணையிருக்க மனித பதர்களின் பட்டமும், பதவியும், அதிகாரமும் யார் வாழ்வைத் தீர்மானிக்கும்?
நாங்களே தீர்மானிப்போம் என்று நீங்கள் மார்தட்டலாம்.
செயலில் நன்னிலை வேண்டும்.
தூய்மை இதயத்தில் குடிகொண்டால்
உங்கள் வழியில் நன்னெறியில் வாழ்வீர்கள்.
ஆனால், உங்களின் இதயமோ பொறாமையின் உறைவிடம்.
ஆணவத்தின் மூலதாரம்.
குரைப்பதைத் தவிர நீங்கள் எதுவும் சாதிக்கவில்லை.
தினமும் நல்லாவே குரைக்கிறீர்கள் அரசியல் பதர்களே.
முடித்து வைத்தப் பிரச்சனையைத் தூண்டி இந்தியாவைக் கூறுபோட அந்நிய சக்தியின் விரலசைவில் பணத்தின் துணையில் ஆடும் ஆட்டம் நீண்ட காலம் நிலைக்கப் போவதில்லை.
எவ்வளவு தான் பிரபலமா உலகத்துக்கே நாயகனாக இருந்தாலும் கூடுவிட்டு உயிர் பறந்துவிட்டால் எல்லோரும் அழைப்பர் பிணம் என்றே.
ஒழுக்கமில்லாதுன் அழிவைக் கண்டு உலகமே பதைபதைக்கும் நாளும் வராது போகுமோ?