பாவம் நீத்தவனைப் பாடினால்…

வார்த்தை மனுவாய் வழியாய் நடந்தகதை
பார்த்தும் படித்தும் பழகினோர் பேசியும்
கூர்த்த மதியோளே! கொஞ்சமும் கேட்டிலையோ?
சீர்த்த அவன்புகழைச் செப்பியே பாடியே
நீர்த்துறை யாடிடவே நின்னை யழைக்கின்றோம்!
போர்த்திப் படுத்துறங்கும் பொன்மஞ்சம் நீங்கிலையோ?
மூர்த்திநம் பாவம் முடியப் பரம்நீத்தான்
கீர்த்தி நினைக்கின் கிடத்தியோ எம்பாவாய்!

எழுதியவர் : எசேக்கியேல் காளியப்பன்... (5-Jun-18, 6:42 am)
பார்வை : 63

மேலே