காஞ்சி குடில்

மூதாதையர் வழி வந்த வீடு ஒன்றை, கலாச்சார விடுதியாக மாற்றி, "காஞ்சி குடில்" என்று பெயரிட்டுள்ளனர். எனினும், இது மட்டுமே அதன் கவர்ந்திழுக்கும் அம்சமன்று. காஞ்சிபுரத்தின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கடந்த காலத்தை மனதில் கொண்டே இவ்விடத்தை உருவாக்கியுள்ளனர். இந்த விடுதியில் தங்கும் விருந்தினர்கள், இவ்வூரின் பெருமையை உணர்ந்து கொள்வதோடல்லாமல், இந்நகரின் வரலாற்றுத் தகவல்கள் பலவற்றையும் அறிந்து கொள்ளும் வகையிலும் இது உள்ளது.

தட்டுமுட்டுச் சாமான்கள் முதல் வழங்கப்படும் உணவு வரை அனைத்தும் இவ்வூரின் கடந்த காலச் சிறப்புகளை விருந்தினர்க்கு எடுத்துக் கூறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இவ்விடுதி, மூதாதையர் வழி வந்த வீடு தான் என்றாலும், இது, இன்றைக்கு உள்ள அனைத்து நவீன வசதிகளுடன், தங்கும் விருந்தினர்களுக்கு எவ்வித சிரமும் இன்றி, சகல வசதிகளோடும் திகழ்கிறது.

இங்கு, மாலை நேரங்களில், கடந்த காலத்தில் இங்கு கோலோச்சிய கலைகளை, விருந்தினர்களுக்கு விளக்கும் பொருட்டு, உருவாக்கப்பட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. பயண நினைவாக பொருள்களை சேகரிக்கும் வழக்கம் உள்ளோர், உள்ளூரில் தயாரான அழகிய கைவினைப் பொருட்களை, காஞ்சி குடிலில் வாங்கலாம்.


Native Planet

எழுதியவர் : (5-Jun-18, 6:17 pm)
Tanglish : kanji kkutil
பார்வை : 21

மேலே