மீண்டும் கார்மேகம் வருமா

·
திரண்டது மேகம்
இருண்டது வானம்
சொரிந்திடுமா பூ மழை
மருண்டு யான் காத்திருக்க...

கதிர்க்கு என்ன கோபமோ....
சென்னைக்கு வந்த சாபமோ....
தூவானமாய் முற்றம் தெளித்து
ஏமாற்றி எங்கோ சென்றது....

மீண்டும் கார்மேகம் வருமா?
விசும்பி அழும் பூமி குளிருமா?
ஏக்கத்தோடு என் மனம்...

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (8-Jun-18, 12:55 pm)
பார்வை : 55

மேலே