வாசியுங்கள் யோசியுங்கள் பூசியுங்கள்

பசித்து புசியுங்கள்
கசிந்து பூசியுங்கள்

புசிப்பன ருசியுங்கள்
வாசிப்பினை ரசியுங்கள்

ஆசிகளை யாசியுங்கள்
அசங்கியங்களை தூசியுங்கள்

சுதேசத்தை சுவாசியுங்கள்
தேசியத்தை பூசியுங்கள்

நீசத்தை துவேசியுங்கள்
நிதர்சனத்தை யோசியுங்கள்

பசியத்தோடு வசியுங்கள்
பாசிதத்தை பொசியுங்கள்

நேசித்து வாசியுங்கள்
யோசித்து விசுவாசியுங்கள்!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (8-Jun-18, 12:59 pm)
பார்வை : 74

மேலே