ஆண் கணவனாகிறான்

ஒரு ஆண் கணவனாகிறான், உண்மை வாழ்க்கையின் அங்கமாகிறான்...

நம்பிக்கை மட்டுமே பிரதானமாகக் கொள்ளணும்...

பகிர்ந்துகொள்ளுதலை பண்பென்று சொல்லணும்...

ஆழமான காதலை அப்படியே காட்டணும்...

புருஷலட்சணத்தை புரிந்துகொண்டு நடந்துக்கணும்...

முன்கோபத்துக்கு முதலில் ஓய்வை பரிசு கொடுத்து அனுப்பணும்...

பொறுமைக்கு முக்கியத்துவம் கொடுக்க கத்துக்கணும்...

வாக்குவாதத்துக்கு வாய்ப்புகள் கொடுக்கக் கூடாது...

சண்டையை சமாளிக்க சமாதானத்துடன் நட்பாகணும்...

எல்லார்கிட்டயும் ஆலோசனை கேட்பதை தடை போட்டு வச்சுடணும்...

மனப்போராட்டத்தை மேற்கொள்ள நல்வழியைத் தேடிப் புடிக்கணும்...

அவமானத்தைப் பொறுத்துக்கொள்ள அமைதியை அன்போடு ஏத்துக்கணும்...

சுட்டுத்தள்ளும் வார்த்தைகளைப் புறந்தள்ளக் கத்துக்கணும்...

குடும்பத்தைக் கட்டுறதுக்கு சுயமரியாதை இடையூறுன்னு புரிஞ்சிக்கனும்...

எதிர்பார்ப்புகளில் எல்லாம் ஏமாற்றமே அதிகம் முடிவாக வரும்...

கற்பனையில் இருந்தது எல்லாம் குப்பையாக மாறிவிடும்...

காலம் தரும் பதில்கள் சில ஆச்சர்யமளிக்கும், பல அதிர்ச்சியளிக்கும்...

எதிர்கால நிறைவைக்காண, உன்னைக் குறைவாக எண்ணாதே...

பிறழும் நாவுகள் முன்வந்து சங்கடத்தை உண்டுபண்ணும், தள்ளி நிற்க கற்றுக்கொள்...

மரணபயத்தின் சில அடிதூரத்தில் நடந்துசெல்ல பழகிக்கணும்...

எண்ணமும், ஏக்கமும் பின்வாங்குதலைச் சார்ந்து இருக்க வேண்டாம்...

பணம் மட்டுமே முக்கியமல்ல, இருமனம் இணைவதே அவசியம்...

மனவலியைப் போக்குவதற்கு, மனவலிமையை அதிகரித்துக் கொள்ளணும்...

எழுதியவர் : ஜான் (9-Jun-18, 9:28 pm)
பார்வை : 1924

மேலே