ஆணழகன்

ஆணழகன்

ஆண்களில் சிறந்தவன், அன்பென்னும் உறுதிமொழியை என்றும் கடைபிடிப்பவன்...

முகமூடி அணிந்தவர்களை பகுத்தறியும் அனுபவப்பாடம் கற்றவன்...

மனம்நோகப் பேசாமல் அமைதி காப்பவன்...

கோபம் என்பதைப் பெருமையாகக் கொள்ளாதவன்...

நட்புக்கு மரியாதையை வாரிவாரி வழங்குபவன்...

துரோகிகளைக்கூட துன்பப்படுத்தத் தயங்குபவன்...

கண்ணீர்த்துளிகளால் மனக்காயத்திற்கு மருந்து கட்டுபவன்...

உண்மையான அன்பு புறக்கணிக்கப்படும்போது மனம் வருந்துபவன்...

பாசத்தால் வந்துசேரும் அவமானங்களால் துடித்துப்போபவன்...

தனிமனித ஒழுக்கத்திற்கு தன்னையே அர்ப்பணிப்பவன்...

வஞ்சகத்தின் வலையைக் கிழித்தெறியும் துணிச்சல்மிக்கவன்...

பழக்கவழக்கங்களில் பண்பைக் கையாள்பவன்...

பெண்களை மதிக்கும் மாண்பை உடையவன்...

பிறர்க்கு உதவ வழிகளைத் தேடுபவன்...

தன்னம்பிக்கை என்னும் உறுதி பூண்டவன்...

உழைப்பை மட்டுமே உண்மை என்பவன்...

எழுதியவர் : ஜான் (9-Jun-18, 10:38 pm)
Tanglish : AANALAKAN
பார்வை : 5026

மேலே