ஆண்தேவதை

ஆண்களெல்லாம் தேவதைகள், புரிந்துகொள்ள நேரம் தேவை...

குடும்பத்தைக் கட்டிக்காக்கும் பொறுப்புள்ளம் கொண்டவன்...

பெண்ணுக்குப் பாதுகாப்பளிக்க இவ்வுலகில் படைக்கப்பட்ட போர்வீரன்...

மரியாதைக்கு மரியாதையை போட்டிபோட்டு வழங்குபவன்...

நாட்டுக்கும், வீட்டுக்கும் தன்னையே அர்ப்பணிப்பவன்...

உழைப்பிற்கு எடுத்துக்காட்டாய் உண்மையோடு திகழ்பவன்...

பிள்ளைகளின் கதாநாயகனாய் வலம்வரும் அதிர்ஷ்டசாலி...

இழப்புகளில் அனுபவத்தைக் கடைந்தெடுக்கும் புத்திசாலி...

செல்வத்தைச் சேர்ப்பதற்கு குறுக்குவழி ஓடாதவன்...

மனைவிக்கான இடம்தந்து பரிசுத்தத்தை கடைபிடிப்பவன்...

எழுதியவர் : ஜான் (9-Jun-18, 11:03 pm)
பார்வை : 5764

மேலே