விவசாயி விவசாயி

ஓ... கடவுளுக்கும் ஏன் காது கேட்கவில்லை
ஓ... ஆண்டவனும் ஏன் ஆதரிக்கவில்லை
அழிந்து போகவோ மெளன சாமியே - உன்
மெளன உருவமே அழிவின் சாவியே
உயிரில் பஞ்சம் உயரும் போது
பயிரால் கொஞ்சம் பலன் தருவேன் - நான்
உயிர் வள்ளல்தான் வள்ளல்தான்
விவசாயி.........! விவசாயி.........! விவசாயி.........!

-ஓ ..

சரணம் - 1

யார் சொல்லியோ மேகம் வரும்
மேகம் வரும் மேகம் மழையும் தரும்
ஏனோ..? எம் வாழ்வில் நீ
அழிவை தந்தாய்
அழிய தந்தாய் கடன் வரம்
தலையெழுத்து சொல்லி
தலை நகரம் போராட
தலைவன் எனச்சொல்லி
தலைமறைவு நீ ஆகிட
போதும்.... போதும்... மன்னா
போராட்டம் என்பது
நீ ஆழும் நாட்டை
நாங்களும் காக்கத்தான் காக்கத்தான்
விவசாயி.........! விவசாயி.........! விவசாயி.........!

சரணம் - 2

ஆஹா... என் நிலமோ தரிசானது
அதுவே உன் பரிசானது
ஓஹோ..என் வாழ்வெல்லாம் பாழானது
உன் காகிதத்தில் எதை எழுதுவது
நீ ஆழவே அது பழுதானது
என் குரலை உன் காதுகள் கேட்டு
கட்டளை இட்டிருக்க வேண்டும்
உன் செவிட்டுக் காதின்
மலட்டுத் தன்மையினால்
வறுமை சூழ்ந்தது
போதும்.... போதும்... மன்னா
போராட்டம் என்பது
நீ ஆழும் நாட்டை
நாங்களும் காக்கத்தான் காக்கத்தான்
விவசாயி.........! விவசாயி.........! விவசாயி.........!

எழுதியவர் : செ.பா.சிவராசன் (15-Jun-18, 12:23 pm)
Tanglish : vivasaayi vivasaayi
பார்வை : 101

மேலே