உதிர்ந்த இலை

மரத்தில்
இருந்து
உதிர்ந்த இலை
இடையிலிருந்து
புலம்புகிறது.....
மரத்திற்கும்
கேட்கவில்லை....
மண்ணிற்கும்
கேட்கவில்லை......

கீழே
விழுந்தால்
மண்
அரித்துவிடும்.......
மேலே
சென்றால்
மரம்
ஒதுக்கிவிடும்......

என்ன
செய்வதென்று
தெரியாமல்
காற்றிலே
அலைமோதி
கொண்டிருக்கிறது
இன்னும் அந்த
இலை...................

எழுதியவர் : திருமூர்த்தி சுப்ரமணி (15-Jun-18, 7:13 pm)
சேர்த்தது : செந்தமிழ்மனிதன்
Tanglish : uthirntha illlai
பார்வை : 354

மேலே