அவள் சிரிப்பு
உன் புன்சிரிப்பு
நீ ஒரு வெகுளிப்பெண்ணோ
என்று என்னை எண்ணவைக்க
நீ உந்தன் செவ்வாய்த் திறந்து
வெண்முத்துப் பற்களால்
சிரித்தாய் சிங்கார சிரிப்பு
அதில் மயங்கி உன்னை நான் நெருங்க
உந்தன் மாங்கனிகன்னங்களில்
சிரிப்பின் குழிகளிரண்டு
என்னைக் குழிபறிக்க! என்னவளே
நீ என்றும் வாழ்வில் சிரித்த முகத்துடனே
வாழவேண்டும் என்று வேண்டிநின்றேன்
இறைவனை அதில் நான் வாழ என்னவளே