அனைத்தும் கண்டவன்
மதியிழந்த செயலினால்
--கதியிழந்து நிற்கிறான் !
விதியென கூறுபவனும்
--வீதியில் அலைகிறான் !
தன்மானம் இழந்திட்டு
--உள்ளதைப் பெருக்கிட
சிம்மாசன வெறியுடன்
--திரியும் அடிமைகள் !
வளங்களை சுரண்டி
--வருவாயைத் தேடி
பெருவாய் விரிக்கும்
--பேராசை முதலைகள் !
மதவெறி பிடித்திட்ட
--மதயானைக் கூட்டம்
அலையுது நாட்டினில்
--ஆட்சியைப் பிடிக்க !
திரையில் மின்னியவை
--தரையில் துள்ளுகிறது
விரைவில் ராஜ்யமென
--வரிந்துக் கட்டுகிறது !
அனைத்தும் கண்டவன்
--அகிலத்தில் தமிழன்
ஆய்ந்து முடிவெடுக்கும்
--அறிவிற் சிறந்தவன் !
பழனி குமார்