எனக்கொரு தேசமிருந்தது !

தேய்ந்து நோய்ந்து
சுருங்கிய தோல்கள்
எனக்கு பென்சன் கொடுத்து
முடித்ததோடு முடிந்தது போராடி
போராடி உருவாக்கிய
தேசிய அரசின் கடமை.

உயிரை துச்சமென விடுத்து
உணர்வை திரளாக்கி
வெள்ளையனே வெளியேறு !
என்றோம் , இன்றோ
எங்களையே நாய்களே
வெளியேறுங்களென எம்
நாட்டை எவனோயொரு
வெள்ளையனுக்கு கூருப்போட்டு
சோரம் போகிறான்...
எதிர்த்தால் பச்சை வேட்டையாடி
மாவோயிசுட் நக்சலைட்யென்றே
தடுப்பு முத்திரையின் கீழ்
முடமாக்குகிறான்.

பணக்காரனை கோடீசுவரனாக்கி
ஏழையை பரம ஏழையாக்கும்
விநோத இந்தியா !
விளையாட்டாய் ஊழலை
ஊக்குவிக்கும் உருமாறிய
தடமாறும் இந்தியா !

திபெத் அகதிகளுக்கோ
மறுவாழ்வு...
எம் நாட்டவனுக்கோ
அனாதை வாழ்வு...
அப்போ இது
ஒற்றுமை இந்தியா !
இப்போ இது
வேசம் கலைந்த
அந்நிய இந்தியா !

எனக்கொரு தேசமுள்ளது
என்னைப்போல்
சுருங்கி நோய்ந்து
சருகாக ,ஈரமற்று
எறிந்த சாம்பல் சருகாக...

எழுதியவர் : மகா.தமிழ்ப் பிரபாகரன் (14-Aug-11, 12:29 am)
பார்வை : 442

மேலே