கொல்லிமலை

ஒரு மனிதன் எவ்வளவு தூரம் பயணம் செய்கிறானோ அவ்வளவு தூரம் அனுபவமும், உணவின் பெருமையும் தெரிந்திருக்கும் என்பார்கள். பொதுவாக பயணங்கள் மட்டுமே மனிதனை பக்குவப்படுத்தும் என்று மகேந்திரன்(40) சொல்லி கொண்டே இருப்பார். அவரும் அவருக்கு தெரிந்த மூன்று நண்பர்கள் கொல்லிமலை பயணம் செய்ய திட்டமிட்டார்கள். மோகன்(32), மார்டின்(38) மற்றும் சலீம்(28) தங்கள் பயணத்தை கொல்லிமலை அடிவாரத்தில் தொடங்கினார்கள். இவர்களுக்கு மகேந்திரன்தான் வழிக்காட்டி, மற்ற மூவரும் பெங்களூரில் வேலை செய்பவர்கள். மலை ஏற்றத்தில் விருப்பமுள்ளவர்கள்.

கொல்லிமலை தரை மட்டதிளிருந்து 27 கிலோமீட்டர் தூரம் உடையது, திருச்சி மற்றும் நாமக்கல் மாவட்டத்தின் எல்லைகளை நிர்ணயம் செய்யும் கிழக்கு தொடர்ச்சி மலை. பெயரைப்போல இல்லாமல் ஆங்காங்கே பிரிந்து அடர்ந்த மூலிகை மரங்களால் ஆனது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 17 ம் நாள் மலையேற்றம் வைரசெட்டிபாளையத்திலிர்ந்து தங்களின் பயணங்களை மக்கள் பொதுவாக தொடருவார்கள். நால்வரும் தங்களின் பயணங்களை பொதுமக்களோடு மக்களாக தொடர்ந்தார்கள்.

சலீம் ஒரு வாரத்திற்கு முன்பே google மூலம் கொல்லிமலையின் வானிலை, சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள், பாதுகாப்பு பொருட்கள், உணவு, நீர், மருத்தவமனை, வரலாறு என அனைத்தையும் தெரிந்து வைத்து இருந்தான். ஒரு வாரத்திற்கு முன்னதாகவே மகேந்திரன், மோகன், சலீம் மற்றும் மோகன் ஆகியோர் மலை ஏறுவதற்காக தங்களை தயார் செய்ய உடற் பயிற்சி செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில் இருந்த சுறுசுறுப்பு மெல்ல குறைய ஆரம்பித்தது. மகேந்திரனை தவிர மற்ற மூவரும் பாதியிலே திணறினர். என்ன செய்வதன்றே தெரியாமல், திரும்பி போகவும் முடியாமல் ஒத்தையடி பாதியிலே பயணத்தை தொடர்ந்தார்கள் நால்வரும்.

புலிப்பு மிட்டாய், குளுக்கோஸ், தண்ணீர் பாட்டில், snacks என சாப்பிட்டு கொண்டே தங்களின் பயணத்தை ஏதோ கொஞ்சம் கடந்து சென்றார்கள். சிறுது நேரத்தில் இப்போது நால்வருக்கும் கால் வலி எடுக்க ஆரம்பித்து விட்டது. அடர்ந்த மலை காடு, காற்றின் ஈரப்பதம் மற்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், மிகவும் கடின பட்டு கொல்லிமலை அரப்பலீஸ்வரரை வேண்டிக்கொண்டே தொடர்ந்து நடக்க ஆரம்பித்தார்கள்.

ஒரு வாரத்திற்கு முன்பே நடக்க பயற்சி செய்தே இந்த நிலைமை. சும்மா வந்திருந்தோம் என்றால்? என்ன ஆகிருப்போம் என்றார் மார்டின்? எல்லாரும் சிரித்து கொண்டே நடக்க முடியாமல் நடந்தார்கள். ஒருகட்டத்தில் அனைவரும் சோர்ந்து போய் பாறையின் மீது அமர்ந்து ஓய்வெடுக்க முடிவு செய்தனர்.

அப்போதுதான் அந்த வழியே ஒரு 75 வயது மிக்க ஒரு வயதானவர் மலையேறி கொண்டு வந்தார். கையில் மேப் இல்லை, snacks இல்லை, தண்ணீர் இல்லை, ஒரே ஒரு எலுமிச்சை பழம் இருந்தது, “அட வாங்கப்பா கிழவங்க மாதிரி உட்கார்ந்திகிட்டு” என நால்வரையும் பார்த்து சிரித்து விட்டு சென்றார். கோபத்தில் நால்வரும் எவ்வளவு முயற்சி செய்தும் அவரை கடக்கவும் முடியவில்லை, கண்டு பிடிக்கவும் முடியவில்லை. மக்களோடு மக்களாய் சுறு சுறுப்பாய் காணமல் போய் விட்டார்.

அந்த எழுபது வயது வாலிபரின் முன்பு நால்வரின் இளமையும் , வலிமையும் மண்டியிட்டு, வெட்கி கிடந்தது யாரும் பார்க்க்காமலே. பயணங்கள் மட்டுமே மனிதனை பக்குவப்படுத்தும் உண்மைதான் போலும்??

எழுதியவர் : பரமகுரு கந்தசாமி (21-Jun-18, 12:57 pm)
Tanglish : kollimalai
பார்வை : 280

மேலே